29 ஜூலை, 2016

நூல் அறிமுகம் "ஏழு கடல்கன்னிகள்" France30.07.2016 
தமயந்தியின்  
"ஏழு கடல்கன்னிகள்" 
 நூல் அறிமுகமும், வெளியீடும்.
5, rue pierre l`ermite,
75018 Paris
(la chplle)
மாலை 6மணிக்கு.


தலைமை: பிரசாத்
அறிமுக உரைகள்: கரவைதாஸன் (டென்மார்க், நெற்கொழுதாசன்


"ஒவ்வொரு துறவிகளும் குறுநில மன்னர்களாகவும், அரசர்களாகவும், பேரரசர்களாகவும், மேதகு சக்கரவர்த்திகளாகவும் கொலுவோச்சியிருந்தார்கள்.
சனங்களின் வாழ்விடங்களுக்கு நடுவே எழுந்திருந்த விரியன்பாம்புப் புற்றுகளை அவர்கள் தீண்டாதிருந்தார்கள். மாறாக, அவற்றின் பாதுகாப்புக்களை மேலும் வலுப் படுத்தினார்கள்.
நஞ்சுப் புற்றுகளுக்குக் காவலாக சனங்களையே நியமித்தார்கள். ஆலகால விருட்சங்களை வெட்டி அக்கினியிலே போடாமல், அவற்றை நந்தவனம் என்றார்கள்.
சனங்களும் நம்பினார்கள்.
சமுத்திரத்தில் பசுமை விதைந்திருந்த தாவாரங்கள் வேரறுந்து கரையொதுங்கி அழுகி நாறிக்கிடந்தன.
சனங்களுக்கு நடுவில் வாழ்ந்திருந்த தேவதைகளோ தலைமறைவானார்கள்.
வண்ணத்துப்பூச்சிகளை வேட்டையாடும் எல்லா உரிமங்களையும் துறவிகள் தங்கள் அங்கிப்பைகளுக்குள் கொண்டு திரிந்தார்கள்.
அச்சப்பட்ட தேவதைகள் வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளுக்குள் தலைமறைத்து வாழ்வதை துறவிகள் நல்லாகவே அறிந்து வைத்திருந்தார்கள்.
வண்ணத்துப் பூச்சிகள் மீதானை வேட்டைகளை இடையறாது விருப்பத்தோடும், ரசிப்போடும் செய்து வந்தார்கள். "17 ஜூலை, 2016

கன்தீல் பலூச் அவரது சகோதரனினால் "கெளரவக் கொலை" செய்யப்பட்டுள்ளார்

பாகிஸ்தானிய Social Media ஸ்டாரான கன்தீல் பலூச் அவரது சகோதரனினால் "கெளரவக் கொலை" செய்யப்பட்டுள்ளார். தமது சமூக, கலாச்சார, மத நெறிமுறைகளை "மீறும்" பெண்களை குடும்ப கெளரவத்தை பாதுகாத்தல் என்ற பெயரில் கொலை செய்வது இறுக்கமான கட்டமைப்பு கொண்ட, சனாதன கீழைத்தைய சமூகங்களில் ஒரு வழமையாகவே இருந்து வருகிறது. நாம் வன்மையாக கண்டிக்கத்தக்க, இழித்துரைத்து அழித்தொழிக்கப்பட வேண்டிய மனிதாயமற்ற பயங்கரவாத பண்பாடு இது. 

10 ஜூலை, 2016

இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

வடமாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடுகளும் பிரதேசவாதங்களும் செல்வாக்கு செலுத்துவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

15 ஜூன், 2016

இன்றைய இலக்கியப் போக்குக் குறித்து -இரயாகரன்-

இலக்கியப்போக்குக் குறித்த இந்த விவாதமானது, வணிக - வலதுசாரிய இலக்கியம் குறித்தல்ல. இலக்கிய உருவம் மூலம் சமூக வேசம் போடும் சமூக செயற்பாட்டை நடைமுறையாகக் கொண்டிருக்காத இயங்கியலற்ற இலக்கியங்கள் குறித்தானது.

27 ஏப்., 2016

இருள் இன்னும் முற்றாக விலகவில்லை -சி மௌனகுரு-

(இது புனைகதை அன்று உண்மை)
இக்கதை நிகழ்ந்த காலம் 2007
 நன்றி: "இனி" டென்மார்க்=======================
ந்திரகுப்த தேனுவர இலங்கையின் நவீன பாணி ஓவியர்களுள் புகழ் பெற்ற ஒருவர். தனக்கென ஓவியத்தில் ஒரு பாணியைத் தோற்றுவித்ததுடன் தனக்கென ஒரு மாணவ பரம்பரையையும் கொண்டவர். சிங்கள மக்கள் மத்தியில் கௌரவத்துடன் கணிக்கப்படுவர். 
 

25 ஏப்., 2016

என்னவாக இருந்தார் லெனின் சின்னத்தம்பி


LeninCOVER
-தர்மு பிரசாத்-


முதலாளி – தொழிலாளி என்ற இருமைகளில் அது தொழிலாளியின் பக்கமிருந்து பேசுகிறது. முதலாளியைத் தீமைகளின் மொத்த வடிவமாகக் கட்டமைக்கும் நாவல், சின்னத்தம்பியை அப்பழுக்கற்ற புனிதராகவும் கட்டமைக்கிறது. இந்தப் புனிதமாக்கலின் பின்னால் உள்ள அறம் சார்ந்த கேள்வியே நாவலை ஒருபக்கமாகப் புரிந்து கொள்ளவைக்கிறது.

முரளியின் லெனின் சின்னத்தம்பி - ஒரு பார்வை-ராகவன்- 

துவரை புலம் பெயர் தமிழர்களால் எழுதப்பட்ட பெரும்பாலான நாவல்கள் சிறுகதைகள் இலங்கைப்பிரச்சனைகளை முன்வைத்தே எழுதப்பட்டிருக்கின்றன. இவ்வகையில் முரளியின் இந் நாவல் வேறுபடுகிறது. இது ஒரு முக்கியமான விடயம்.
கடிகாரத்தால் கட்டுண்டு அன்னியமாகிப்போன கடை நிலை தொழிலாளர்களின் புலம் பெயர் வாழ்வினை –நாவல் சித்தரிக்கிறது. 19 மார்., 2016

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன? தமிழினியின் கருத்து சரியா??

 “ஆகா, மிகச் சரியாக சொல்லிவிட்டார் தமிழினி” என்கிறார்கள்.

 “தமிழினி துரோகம் செய்துவிட்டார்” என்கிறார்கள்.


விடுதலைப்புலிகள் அரசியல்துறை மகளிரணி பொறுப்பாளராக இருந்த மறைந்த தமிழினி எழுதிய “ஓர் கூர்வாளின் நிழலில்…” என்று தன் வரலாற்று நூல் உலகத் தமிழரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

16 மார்., 2016

இலங்கை அகதியின் இரு கால்கள் உடைப்பு : போலீஸ் தாக்குதல்


மதுரை மாவட்டம் உச்சம்பட்டி அகதிகள் முகாமில் சமீபத்தில் இலங்கை அகதி ரவீந்திரன் வருவாய்த்துறை அதிகாரியின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி முகாமில் சுபேந்திரன் என்ற அகதி, சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லி பாபு தலைமையிலான காவலர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு அவரது இரண்டு கால்களும் உடைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போடும்படி உளவுத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் சுபேந்திரனையும், அவரது துணைவியாரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கேள்விகேட்ட முகாமின் தலைவர் கண்ணனையும் காவலர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கி ஜட்டியோடு உட்கார வைத்துள்ளனர். முகாமைச் சேர்ந்த பலர் மீதும் காவல் துறையினர் பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அகதிகள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு ஆளாவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நன்றி: மின்னம்பலம், (வியாழன், 17 மா 2016)


15 மார்., 2016

அடிமையாக உழைத்த இனத்துக்கு யாரிங்கு இழப்பீடு கொடுப்பது

-புனித பாண்டியன் நேர்காணல்! 
 நேர்காணல் - குணவதி - முதன்மை உதவி ஆசிரியர் "மின்னம்பலம்"

 உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே, கௌசல்யா என்ற சாதி இந்துப் பெண்ணும், சங்கர் என்ற தலித் இளைஞரும் காதலித்து மணம் புரிந்ததால், அவர்களின்மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்(!) கொடூரத் தாக்குதல் நடத்தியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். கெளசல்யா படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார். இது, நாடு முழுக்க சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சாதிக் கெளரவத்துக்காக நடத்தப்பட்ட கொலைதான் இது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளநிலையில், தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியனிடம் மேற்கொண்ட நேர்காணல் பின்வருமாறு:


10 மார்., 2016

சமா - பானுபாரதி


நான்
பறைச்சி கதைக்கிறேன்.

ஓம் அப்பிடித்தான்.

எங்கள் ஆயுள்பரியந்தம்
இப்படியாகத்தானே நீங்கள் கூப்பிட்டு
எங்கள் சொந்தப் பெயர்கள் இன்னதென்று
அறியாதபடிக்கு மறக்கடிக்கப் பட்டோம்

7 மார்., 2016

தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்: அ. முத்துகிருஷ்ணன்


muthu
அ. முத்துகிருஷ்ணன்

மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள் அனைத்துமே மனித உரிமை மீறல் தான். 
 
 

5 மார்., 2016

கடுகு -எஸ்.எல்.எம். ஹனீபா-வாப்பா உங்களுக்கு கதெ தெரியுமா?
இஞ்செ இரிக்கேலாது வாப்பா, பொழுது விடிஞ்சா ஒரே சண்டெதான். நானாவும் ராத்தாவும் என்னப் போட்டுப் படுத்துற பாடு.

அதுக்குப் புறவு ஸ்கூல் இரிக்கிதே. அங்கேயும் ஒரே கூத்துத்தான்.
எல்லாப் புள்ளெகளயும் ஒண்டாப் போட்டு மவ்லவி சேர் கதவெல்லாம் அடெச்சிப் போடுவாரு. எங்கட பள்ளிக்கு அவரு மட்டுந்தான் சேரு வாப்பா.
சாந்தி டீச்சரும் மாறிப் பெய்த்தா. அவெடெ வீட்டெயும் பத்த வெச்சிப் போட்டானுகளாம். அவெ இரிக்கி மட்டும் ஒரே பாட்டும் கதெயுந்தான்.
“வண்ணாத்திப் பூச்சி வண்ணாத்திப் பூச்சி பறக்குது பார் பறக்குது பார்”. அவ வண்ணாத்திப் பூச்சி போல பறப்பா.
மவுலவி சேர் வருவாரு.
பிள்ளைகளெல்லாம் எழும்புங்க – கைய உசத்துங்கெ. எல்லாரும் இரிங்கெ. 

அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் -நந்தினி சேவியர்-


நாங்கள் வழமைபோல குந்தியிருக்கும் ஞான வைரவர் கோவில் ஆலமரத்தின் கீழ் குந்தியிருந்தோம். சின்னையரின் தேநீர்க்கடை இன்னமும் திறக்கவில்லை. முன்புறத்துத் தட்டியை இழுத்துச் சாத்திக் கட்டியிருக்கும் கயிற்றின் முடிச்சு வழமைபோல இறுகியே இருந்தது. மனிதர் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு தட்டியை அவிழ்க்க ஆறுமணியாகிவிடும். அது எங்களுக்குத் தெரிந்துதானிருந்தது. காலைநேர வயிற்றுப் புகைச்சலைத் தவிர்க்க சின்னையர் போட்டுத்தரும் தேநீருக்காக நாங்கள் காத்துக்கிடந்தோம். எங்களது அணியச் சாமான்கள் ஒதுக்குப்புறமாக விழுதுகளில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன .
முதல்நாள் ஆறுமுகத்தானின் "வாய்ச்சி "ஆணியொன்றில் பட்டுவிட்டதால் எங்களது அணியத்தில் ஒரேயொரு பொருள் மட்டும் குறைந்திருந்தது.
 

21 பிப்., 2016

"நாம்தாம் இந்த நாடு. இந்த மண்ணை நாம் நேசிக்கிறோம்." ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தலைவர் கன்னையாகுமாரின் உரை

 
(டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்  கன்னைய குமார்  2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்)
COUNTERCURRENTS.ORG, 18 FEBRUARY, 2016 இதழில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார்.
  மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்ட சாவர்க்கரின் கைக்கூலிகள். அவர்கள்தாம் இப்போது ஹரியானாவில் ஒரு விமான நிலையத்திற்குச் சூட்டப்பட்டிருந்த தியாகி பகத்சிங்கின் பெயரை அகற்றிவிட்டு  சங் பரிவாரத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரைச் சூட்டியுள்ள கட்டார் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். இதில் நாம் முடிவுக்கு வரவேண்டியது என்னவென்றால், நாம் தேசிய வாதிகள் என்னும் சான்றிதழை வழங்க நமக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை என்பதுதான்.

14 பிப்., 2016

பல்துறையாளன் நாடகக் கலைஞன் அரசையா - சி .மௌனகுரு-


அன்புமிக்க நாடக ஆர்வலர்களே!
விசேடமாக யாழ்ப்பாணத்தில் நாடகம் செய்யும் இளம் நாடகக் கலைஞர்களே!,

உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். அரசையா என நாடக உலகில் அழைக்கப்பட்ட  திருநாவுக்கரசு அவர்கள் தமக்கு எண்பத்திரண்டு வயதாகிய நிலையில்
உடற் சுகயீனமுற்று  மிக மிகத் தளர்ந்து போய் இருப்பதாக அறிந்தேன். இன்று என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் தன் மன ஆதங்கங்களை மள மளவென ஒரு மணி நேரம் என்னிடம் கொட்டினார் தளதளத்த குரலில் கொட்டினார்.  
 

8 பிப்., 2016

மீன்பிடித் தடைச் சட்டம் - விளப்பமற்ற ஆய்வுகளும், பொருத்தமற்ற சட்டங்களும்.தற்போதைய இலங்கைச் செய்தி: 

"யாழ்ப்பாணத்தின் குடாக்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட தடைவிதிக்கப்படவுள்ளது. தமிழக நடைமுறைகளை ஒத்ததாக மீனின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில் கடலுக்கு 45 நாட்கள் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடாமல் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தீவுப் பகுதியிலிருந்து பண்ணைப் பகுதி வரையிலும் அதிகளவான உள்ளூர் மீன்பிடி முறைமையான களங்கட்டிகள் போடப்பட்டுள்ளன. இந்தக் களங்கட்டிகளால் மீன்களின் இனப்பெருக்கமானது பாதிக்கப்படுகின்றது. அந்த களங்கட்டிகளைத் தாண்டியே காக்கைதீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீன்கள் வரவேண்டியுள்ளது.

அத்துடன், குடாக்கடலில் மீன்களின் படுகைகளும் குறைந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு, மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது."


மேலேயுள்ளது தற்போதைய செய்தி. இந்தச் செய்தி உண்மையா பொய்யா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. உண்மையாக இருக்கும் பட்சத்தில்.....
படு முட்டாள்த்தனமான முடிவு என்பது இதைத்தான். இத்தகைய ஆலோசனைகளை வழங்கும் அந்தக் கடல்வள ஆராய்ச்சி அறிவாளிகள் யாரென்பதை அறிய மிகுந்த ஆசையாக இருக்கிறது.

31 ஜன., 2016

முற்றுப்பெறாத ஓவியம்- ரோஹித் வெமுலா

ரோஹித்தின் பிறந்தநாளான ஜனவரி 30 அன்று இதைப் பதிவேற்றுவது தற்செயல் நிகழ்வுதான் எனினும், தன் பிறப்பே மரணத்தையொத்த விபத்து என்று ஏன் சொன்னார் ரோஹித் என்பதற்கான சான்று இப்பதிவு. ரோஹித் பிறப்பதற்கும் முன்பே தொடங்கிவிட்டது அவரின் துயரம் என்றுதான் கூறவேண்டும். எதை எழுதினாலும் மொழிபெயர்த்தாலும் அதை பகிருங்கள் என்று கூறி இதுவரை முகநூலில் வேண்டுகோள் வைத்ததில்லை. முதன்முறையாகக் கேட்கிறேன். நண்பர்களே! இப்பதிவு அதிகம் பேரைச் சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு தலித் வாழ்க்கையின் மிகப்பெருந்துயரத்தைத் தாங்கிய ரோஹித்தின், அவரது தாய் ராதிகாவின், அவரது சகோதரர் ராஜாவின் இக்கதை இந்தியாவில் உள்ள, உலகில் உள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. இதிலுள்ள தகவல்களைத் திரட்ட ஒரு செய்தியாளராக எத்தனை சிரமங்கள் இருந்திருக்கும் என யூகிக்க முடிகிறது. இதை எழுதிய சுதிப்டோ மோண்டலுக்கு நன்றியும் சிரந்தாழ்ந்த வணக்கங்களும்.
தோழமையுடன் கவின்மலர்-
*****

27 ஜன., 2016

வீரியம் குன்றாத சாதியம்! - க. நவம் -

- கடந்த வருடக் (2015) கடைசியில் ரொறன்ரோவில் நடைபெற்ற திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ நூலறிமுக நிகழ்வில் வழங்கிய உரையின் எழுத்துருவம். -


 மது ஊரில் சவரத்தொழில் செய்து வாழ்ந்துவந்த குடும்பம் ஒன்றின் கதையை, எழுத்தாளர் தெணியான் அவர்கள் ‘குடிமைகள்’ என்ற பெயரில் ஒரு நாவலாக எழுதியிருந்தார். அதற்கான அறிமுக நிகழ்வு ஒன்றினை, கடந்த வருடம் அவரது நண்பர்கள் கொழும்பில் நடத்தியிருந்தனர். அதில் கலந்துகொண்ட கொழும்புவாழ் கனவான்கள் சிலர், ”சாதியம் செத்துப்போன இன்றைய நிலையிலும், இது போன்ற படைப்புக்களுக்கான அவசியந்தானென்ன?” எனக் கேட்டு, ’அரியண்டப்’ பட்டிருந்தனர். இதே கேள்வியை திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது இந்த நூல் குறித்து, ஒருசில தமிழ்க் கனடியக் கனவான்கள், கல்விமான்கள் கேட்டுக் கறுவிக்கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

2 ஜன., 2016

ஒரு இனம் மட்டும் ஏன் வஞ்சிக்கப் பட்ட இனமாக இருக்க வேண்டும்?

நேர்காணல்  -
திருக்கோவில் கவியுவன்

1990 களில் புதிய கவனிப்பைப் பெற்ற கதைகளோடு, அறிமுகமாகியவர் திருக்கோவில் கவியுவன். இயற்பெயர், இராசையா யுவேந்திரா. இலங்கையின் செறிவடர்த்தி மிக்க இலக்கியப் பிரதேசமான கிழக்கு மாகாணத்தின் - திருக்கோவிலில் 24 ஜனவரி 1971 இல் பிறந்தவர். புடவைத் தொழில் நுட்பத்தில் பொறியியல் பட்டதாரியான கவியுவன், 2001 ல் இலங்கை மத்திய அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட  நிர்வாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தி எய்திருந்த போதும் 68 நாட்கள் வயது அதிகம் என்ற காரணத்தால் நேர்முகத்தேர்வில் நிராகரிகப்பட்டு, கல்முனையில் கட்டிடத் திணைக்களத்தில் பணியாற்றுகிறார். பிரத்தியேகமாக உவெஸ்லி பாடசாலையில் பௌதீகவியல் வருகை தரு ஆசிரியராகத் தற்போது (2013) கற்பிக்கிறார். 

16 டிச., 2015

பாலியல் நிந்தனைச்சொற்களும் ஆணாதிக்கமும் -சிவசேகரம்-

மனிதர் மனிதரை நிந்திக்கப் பயன்படும் சொல் பல வகையின. ஒருவரை இழிவாகப் பேச அவரைத் தாழ்த்தும் வகையிலான சொற்களும்
சொற்தொடர்களும் பாவிக்கப்படுவது வழமை. எனவே நிந்தனைச் சொற்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவற்றுக்குரிய சமுதாய விழுமியங்களை பிரதிபலிப்பன. பல்வேறு மனித சமுதாயங்களிலும் பன்படுத்தப்படும் நிந்தனைச் சொற்களில் கணிசமான ஒற்றுமை உள்ளது.
இது சமுதாய விழுமியங்களிடையே உள்ள பரவலான ஒருமையின் காரணமானது. அதேவேளை சமுதாய வேறுபாடுகளும் மொழி விருத்தியின் வேறுபாடும் நிந்தனைச் சொற்களிலும் வேறுபாட்டுக்கு காரணமாகின்றன. நமக்குப் பரிச்சயமான மொழியிலுள்ள நிந்தனைச் சொற்கள் பற்றியும் குறிப்பாக பாலியல் தொடர்பான சொற்கள் பற்றியும் கவனிப்போமாயின் பல ஆயிரம் வருடப் பெண்ணடிமை இழிசொற்களிலும் ஆழமாக வேரூன்றி இருப்பதை காணலாம்.

12 டிச., 2015

லெனின் சின்னத்தம்பி" நாவலும், பிற்குறிப்பும் -இரயாகரன்-


னித உணர்வுகளானது முதலாளித்துவ, பண உறவுகளாக மாறிவிட்ட எதார்த்தத்தை,  "லெனின் சின்னத்தம்பி" என்ற நாவல் அற்புதமான அழகியலாக்கி இருக்கின்றது. உழைப்பைச் சுற்றிய மனித உறவுகள், முதலாளித்துவ உறவாக எமக்குள் எப்படி இயங்குகின்றது என்பதை, இந்த நாவல் மூலம் தரிசிக்க முடியும். எல்லா மனிதர்களும் குறைந்தது இதில் ஒருவனாகத் தன்னும் வாழ்கின்றனர் என்பதே எதார்த்தமாகும். இதுவொரு கற்பனையல்ல. வெளிப்படையான பொது எதார்த்தத்தைக் கடந்த, அது தோன்றுகின்ற சூழலுக்குரிய உள்ளார்ந்த எதார்த்தத்ததின் உட்புறத்தை இந்த நாவல் உடைத்துக் காட்டி இருப்பது இதன் சிறப்பு.


11 அக்., 2015

டேவிட் அய்யா -1924 – 2015 – வாழ்வும் பயணமும்…

டி.அருள் எழிலன்

புகைப்படங்கள் – மரக்காணம் பாலா 
 
தனது 92 -வது வயதில் கிளிநொச்சியில் மறைந்திருக்கிறார் டேவிட் அய்யா. தமிழீழம் அமைந்தால் ஈழத்திற்குச் செல்வேன் என்று சொன்ன அந்த முதியவர் சென்னையில் இருந்து ஜூன் மாதம் கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டார். சென்னை வாழ்க்கை முழுக்க கசப்பும், அந்நியமுமான அவருடன் நான் நடத்திய நீண்ட உரையாடல் இது. 


உங்களுடைய இளமைக்காலம் பற்றிய நினைவுகளைக் கூறுங்கள்?
நான், 1924ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கரம்பனில் பிறந்தேன். அப்பா பெயர் அருளானந்தம், அம்மா பெயர் மரியப்பிள்ளை, எங்கள் வீட்டில் ஆண்கள் நான்கு பேர், பெண்கள் இரண்டு பேர். 

10 அக்., 2015

உ.பி.தன்கர்: பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாய்...

தலித்துகளுக்கு எதிரான எந்தவொரு அட்டூழியும் நிகழும்போதும்,  அவர்கள் தமக்குதாமே அந்த குற்றத்தை இழைத்துகொண்டதாக சொல்லி தம்மை விடுவித்துக்கொள்வது சாதியவாதிகளின் தந்திரம். தன்கர் கொடுமையிலும் அப்படி பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்க மட்டுமீறிய உற்சாகத்துடன் சிலர் குதிக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக பிபிசி ஹிந்திப்பதிப்பு செய்தியையும் காணொளித்துண்டு ஒன்றையும் பகிர்ந்து இதுவரையான தமது தலித் விரோதக் கொடூரங்களையெல்லாம் கழுவப் பார்க்கிறார்கள். ஒரு சம்பவத்தை அதன் முழுமையில் வைத்துப் பார்க்காமல் தமது மனவியல்புகளுக்கேற்ற துணுக்கை பூதாகரப்படுத்திப் பார்ப்பதன் வழியே மீண்டும் இங்கே வெளிப்படுவது சாதியக் கொண்டாட்டம்தான். இந்நிலையில்
என்ற இணைப்பில் வெளியாகியுள்ள உண்மையறியும் குழுவின் அறிக்கை விசயங்களை ஓரளவு தெளிவுபடுத்துகிறது.


4 அக்., 2015

முள்ளிவாய்க்காலில் கடைசி வரை சென்ற அமரதாஸின் கமெரா

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் மன்ற அமர்வுகளின் தொடர்ச்சியாக, ஐ.நா பக்க அரங்கில் சுயாதீன ஊடகவியலாளரும் கலை இலக்கிய செயற்பாட்டாளருமான அமரதாஸ், தன் வசமுள்ள தமிழினப் படுகொலை சார்ந்த ஆதாரங்களை முன்வைத்து 2015.10.01 அன்று, உரையாற்றினார். 
 
போர்க்காலத்தில், தமிழின அழிப்புக் களத்தில், அவர் பதிவு செய்த ஒளிப்படங்கள் பலவற்றைக் காட்சிப்படுத்தி தமிழில் உரையாற்றும் போது ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டது. அமரதாஸ், யுத்த நெருக்கடிகளால் சூழப்பட்ட வன்னிப்பகுதிக்குள்ளிருந்து ஒரு கவிதைத் தொகுதியும், ஒரு ஒளிப்படத் தொகுதியும் வெளியிட்டிருக்கிறார். தனிநபர் ஒளிப்படக் காட்சியினையும் செய்திருக்கிறார். சினிமாத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால் கடைசி வரை சென்று பல்வேறு நிலைமைகளையும் படங்களாகப் பதிவு செய்து, பல்வேறு வழிகளில் வெளிக்கொண்டு வந்தவர். அவரது உரையின் முக்கிய பகுதிகளும் வீடியோ இணைப்பும், அவரது சில ஒளிப்படங்களும் கீழே இணைக்கப்படுகின்றன.
 

1 செப்., 2015

நிலவிலே பேசுவோம் -என்.கே.ரகுநாதன்- (1951)


  மாலையிலே மது ஒழிப்புக்கூட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அந்த மாபெருங் கூட்டத்திலே, ஆண்சிங்கம் போலத் தோன்றி மதுவின்பால் ஏற்படும் தீமைகளையும் அது ஒழிக்கப்படவேண்டிய அவசியத்தையும், அதற்கான வழிவகைகளையும் அள்ளி விளாசி, இடையிடையே காந்தியத்தைப் பூசி, அழகு தமிழிலே அனல் பறக்கப் பேசிவிட்டுச் சற்று முன்புதான் வந்திருந்தார் ஸ்ரீமான் சிவப்பிரசகாசம் அவர்கள்.
அப்போது மணி எட்டு இருக்கும். அவருக்குப் பசி; அத்துடன் கூட்டத்திற் பேசிய களைப்பு வேறு. 

சாப்பிட்டு முடிந்ததும், அறுசுவையுண்டியின் ருசியில் நாவைத் திளைக்க விட்டபடியே, உள்ளே இருந்த ‚ஓர் குலம்’ பத்திரிகையைக் கையில் எடுத்துக் கொண்டு ஜகஜ் ஜோதியாய்ப் பிரகாசித்துக்கொண்டிருந்த மின்விளக்கின் ஒளியில் பத்திரிகையைப் புரட்டிப் படிக்கத் தொடங்கினார்ஒரு பத்தி கூட வாசித்திருக்கமாட்டார். வெளியே, வாசற் பக்கமாகச் சிலர் பேசுவது கேட்டது. பத்திரிகையில் படித்திருந்த பார்வையைத் திருப்பி அங்கே நோக்கினார்.


9 ஆக., 2015

யார் இந்த லெனின் சின்னத்தம்பி? -சுரதா யாழ்வாணன்-


விரும்பி தோல்வியை ஏற்றவனின் கதை பெரும்பாலும் பேசப்படுவதில்லை.
அடிமை வாழ்வை வெறுத்து அதனிடமிருந்து தப்பித்து மீண்டும் இன்னொரு அடிமைச்சகதியில் வீழ்தல் என்பது ஐரோப்பிய புலம் பெயர் இளைஞர்களுக்கு தவிர்க்க முடியாததாயிற்று.

இப்படி மீளமுடியாதவாறு அமிழ்ந்துபோன பல்லாயிரக்கணக்கான புலம் பெயர் இளைஞர்களின் வாழ்வு குறித்த ஒரு சோற்றுப்பதம்தான் முன்னாள் போராளியும் புலம்பெயர் இளைஞனுமாகிய ஜீவமுரளி (Annam Sinthu jeevamuraly) எழுதிய லெனின் சின்னத்தம்பி நாவல் என்பேன்.

பஞ்சத்தில் புலம் பெயர்ந்தபோதும் சரி அச்சத்தில் கிளம்பியபோதும் சரி பலர் தமது முதுகில் தமது குடும்பபாரத்தையும் நினைவில் சுமந்தவாறே புலம் பெயர்ந்தார்கள்.

5 ஆக., 2015

படம் ஏற்படுத்தும் குற்றவுணர்வை கடப்பது கடினம் -பிரளயன்-காக்கா முட்டை திரைப்படம் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ள சூழலில் அதனை விமர்சிக்கிற கருத்துக்களும் அதற்கு கிடைத்த வரவேற்பினை ,பாராட்டினை ‘ஊதிப் பெருக்கப்பட்ட ஊடக மாயை’ , ‘சந்தைப்படுத்துகிற புதிய உத்தி’ என்றெல்லாம் சந்தேகிக்கிற போக்குகளும் இருக்கிறதென்பது உண்மைதான். 


2 ஆக., 2015

சக்திக்கூத்தின் அழகியல்-அரசியல்-பெண்மனம்

தர்மினி

sakthi coothu 1
 
பிரசன்னா இராமசாமியின் சக்திக்கூத்து பாரிஸில் 3 நாட்களுக்கு நடைபெறப்போகின்றது என்ற அறிவிப்பைப் பார்த்ததிலிருந்து ஆர்வமிகுதியோடு காத்திருந்தேன். இவர் 24 நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். தமிழ்-உருது மற்றும் ஆங்கிலத்திலும் முழுநீள நாடகங்களோடு நாடகவாசிப்பு-பயிற்றுவித்தல் என நாடகம் தொடர்பான ஈடுபாட்டோடு வாழும் பிரசன்னா இராமசாமியை நாடகத்தோடு இணைந்த பெயராய் தான் அறிந்திருந்தேன். யுத்தம் அதனால் குழந்தைகளும் பெண்களும் படும் துயரங்கள்-பிரிந்து சென்ற தாய்நிலம்-புதிய வாழ்வு எனப் போர் விளைவித்த இரு பக்கங்களும் பேசப்படும் படைப்புகளை உருவாக்குகிறார்.  
 

22 ஜூலை, 2015

“இவர்களுக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்.”

ஜீவமுரளியின் 

லெனின் சின்னத்தம்பி ;

நாவலை முன்வைத்து தேடகம் ஒழுங்கு செய்த அரங்கில் பேசியது.

கற்சுறா“திட்டமிட்டு ஒருவருக்கு அயோக்கியத்தனம் பண்ணுகின்ற ஒருவன்
ஒருபோதும் இன்னொருவருக்கு நன்மை செய்துவிடப்போவதில்லை.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அப்படி அவன் நன்மை செய்கிறான் என்றால்
எப்போதும் அது தன்னுடைய இலாபம் கருதியதாகவே இருக்கும்.
ஆனாலும் அந்த அயோக்கியத்தனத்தை மற்றவனுக்குச் செய்வதற்காக அவன் தருணங்களைக் கணக்கிட்டபடியே இருப்பான்.”

இந்தச் சத்தியம் பலருக்கு தமது வாழ்வின் அனுபவமாக இருந்தாலும் ஒரு ரெஸ்ரோரன்ட் தொழிலாளிக்கு அவன் அன்றாடம் உணரும் சத்தியமாக இருந்து விடுகிறது.